VIDEO : "இந்த உலகத்துல எங்க 'டிராவல்' பண்ணனும்னு ஆசப்படுறே?"... 9 'வயது' சிறுவன் சொன்ன பதில்,,.. நெட்டிசன்களை கலங்க வைத்த வைரல் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்யு.எஸ் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் தனது விருப்பம் தொடர்பாக பேசும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

9 வயதான ஜோர்டன் என்னும் சிறுவன், தனது பெற்றோர்களை இழந்த நிலையில் மூன்று வயதில் இருந்தே பராமரிப்பு இல்லம் ஒன்றில் வளர்ந்து வருகிறான். இந்நிலையில், டிவி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய ஜோர்டனிடம் தொலைகாட்சி நிருபர் ஒருவர், 'இந்த உலகில் எங்கு செல்ல விரும்புகிறாய்?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சிறுவன் ஜோர்டன் அளித்த பதில் காண்போரின் இதயத்தை உருக்குவதாக இருந்தது. 'யாராவது என்னை தத்தெடுத்து கொண்டு அந்த குடும்பத்தில் இணைய ஆசைப்படுகிறேன். தாய், தந்தை என அழைக்கவோ, தாய் என்று மட்டும் அழைக்கவோ, அல்லது தந்தை என்று மட்டும் அழைக்கவோ எனக்கு ஒரு குடும்பம் வேண்டும். அப்போது எனக்காக பேசுவதற்கு சில பேர் இருக்கிறார்கள் என்ற உணர்வு வரும். நீங்கள் யாராவது என்னை தேர்ந்தெடுப்பீர்கள் என நம்புகிறேன்' என ஜோர்டன் தெரிவித்துள்ளான்.
அதே போல, தனக்குள்ள மூன்று ஆசைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, 'குடும்பம், குடும்பம், குடும்பம். அது மட்டும் தான் என் வாழ்நாளில் ஒரே விருப்பம்' என சிறுவன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவன் ஜோர்டன் வருங்காலத்தில் தான் ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளான். சமூகத்தை பாதுகாத்து சேவை செய்வதற்காக வேண்டி போலீஸ் ஆக தான் ஆசைப்படுவதாக ஜோர்டன் குறிப்பிட்டான்.
இது தொடர்பான வீடியோ இணைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், சிறுவனின் மனதை உருக்கும் விருப்பத்திற்கு பல ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்தனர். அது மட்டுமில்லாமல், சிறுவனை தத்தெடுத்து கொள்ள வேண்டி பல மாகாணங்களில் இருந்து, 5000 பேர் வரை விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
