VIDEO : 'என்ன 'டாடி', இப்டி பண்ணிட்டீங்களே??..." மகள் எடுத்த வீடியோவில் குத்தாட்டம் போட்ட 'தந்தை'... அதன்பிறகு தெரிய வந்த அல்டிமேட் 'ட்விஸ்ட்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது மகள் எடுத்துக் கொண்டிருந்த வீடியோ ஒன்றில், மகள் எதற்கு அதை எடுக்கிறாள் என தெரியாமல், பின்னால் நின்ற தந்தை காமெடியாக ஆடிய வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிறுமி ஒருவர், 'craft' வேலைகளை நாம் இப்போது செய்யப் போகிறோம் என கூறி கையிலுள்ள சில பொருட்களை கொண்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறது. பள்ளியில் அனுப்ப வேண்டிய ப்ராஜெக்ட் வேலைகளுக்காக சிறுமி அந்த வீடியோவை பதிவு செய்த நிலையில், அதுகுறித்து அறியாத தந்தை, வீடியோ முழுவதிலும் வேற லெவலில் ஆட்டம் போட்டுள்ளார்.
தனது மகள் சாதாரணமாக வீடியோவை எடுப்பதாக நினைத்த தந்தை அப்படி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி, மகளின் பள்ளிப் படிப்புகளுக்காகவுள்ள மொபைல் செயலி ஒன்றை திறந்து பார்த்த போது அதில் இந்த வீடியோவை தனது ஆசிரியைக்கு மகள் அனுப்பி வைத்துள்ளது தெரிந்தது.
வீடியோவைக் கண்டு வாய் விட்டு சிரித்த மனைவி, உடனடியாக இந்த சம்பவத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'மகளின் பள்ளி தொடர்பான செயலியை திறந்து பார்த்த போது இந்த ப்ராஜெக்ட் வீடியோவை அவர் தனது ஆசிரியைக்கு அனுப்பியது தெரிய வந்தது. நான் எப்படி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேனோ, அதே போல அவரது ஆசிரியையும் நிச்சயம் சிரித்துத் தள்ளியிருப்பார். எனது கணவர், மகள் எப்போதும் போல வீடியோக்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் என நினைத்துள்ளார். ஆசிரியருக்கு இந்த வீடியோவை மகள் அனுப்ப போகிறார் என்பது அவருக்கு தெரியவில்லை' என்றார்.
இந்த வீடியோ அதிகம் வைரலான நிலையில்,13 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

மற்ற செய்திகள்
