"'ட்ரெயின்' பக்கத்துல வந்துருச்சு... சீக்கிரமா வாங்க..." எச்சரித்த 'போலீஸ்'... நெருங்கி வந்த 'ரெயில்'... 'திக்' 'திக்' நிமிடங்கள்... பரபரப்பு 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை பகுதி போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது உயிரை பணயம் வைத்து ரெயில் முன்பிருந்து நபர் ஒருவரை காப்பாற்றியதற்காக அதிக பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.
மும்பை பகுதியின் தாஹிசர் (Dahisar) ரெயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க கண்பத் சோலங்கி என்பவர், நடைமேடையின் ஒரு பக்கத்தில் இருந்து எதிரேயுள்ள நடைமேடைக்கு ரெயில் தண்டவாளம் வழியே கடக்க முயன்றுள்ளார். அப்போது, நடைமேடை அருகே வந்த போது, ஷூ ஒன்று தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
இதனை மீண்டும் எடுத்துக் கொண்ட அந்த நபர், மறுபக்கம் சென்று ஷூவை மாட்டியுள்ளார். இதனை நடைமேடையில் நின்று கண்டு கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள், ரெயில் அருகே வருவதால் உடனடியாக கடந்து நடைமேடை வர அந்த நபரிடம் அறிவுறுத்தியுள்ளார். ரெயில் அருகே வந்து விட்ட போதும், எந்தவித பதட்டமும் இல்லாமல், தண்டவாளத்தை கண்பத் கடந்து வந்த நிலையில், மிக அருகே ரெயில் வந்த போது கான்ஸ்டபிள் உடனடியாக அவரை மேலே இழுத்து காப்பாற்றினார்.
#MumbaiRains #Dahisar #Railway #Stations pic.twitter.com/APqPsBYazU
— Kalpesh Solanki (@Kalpesh90745675) January 2, 2021
ரெயில் அருகே வருவதைக் பெரிய விஷயமாக கூட எடுத்துக் கொள்ளாமல், ஆபத்தில் மாட்டப் போன அந்த நபரை கான்ஸ்டபிள் தனக்கு வந்த கோபத்தில் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
தனது உயிரை கிட்டத்தட்ட பணயம் வைத்து முதியவரின் உயிரை காப்பாற்றிய கான்ஸ்டபிளிற்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.