VIDEO : "'மருமகன்' இப்டி ஒரு 'ENTRY' 'குடுப்பாரு'ன்னு.... யாரும் நெனச்சு கூட பாத்துருக்க மாட்டாங்க..." அல்டிமேட்டாக வந்திறங்கிய 'மணமகன்'!!... வைரல் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் துமகூரு (Tumakuru) மாவட்டத்தை சேர்ந்தவர் பலராம். இவரது மனைவி ரமாதேவி. இந்த தம்பதியரின் மகன் நிரூப்.

தொழிலதிபரான நிரூப், சொந்தமாக அரிசி ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும், பெங்களூரு தலகட்டபுரா பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருவரின் குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, நேற்று காலை துமகூரு பகுதியில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் மணமகன் நிரூப் மற்றும் அவரது குடும்பத்தினர் தலகட்டபுரா பகுதியிலுள்ள திருமண மண்டபத்திற்கு வந்தடைந்தனர். இதனைக் காண வேண்டி, ஏராளமான பொது மக்கள் மண்டபத்தின் முன்னிலையில் குவிந்தனர். இதன்பிறகு, நிரூப் - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது.
Niroop, a businessman from #Tumakuru takes chopper to reach marriage hall located on Kanakapura road. He will be tying knot with Aishwarya, a Bengaluru based girl on Wednesday. @TOIBengaluru pic.twitter.com/O3YR7d9NkR
— Kiran Parashar (@KiranParashar21) December 1, 2020
ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது தொடர்பாக பேசிய மணமகன் நிரூப், 'எனது திருமணம் புது விதமாக இருக்க வேண்டும் என எனது குடும்பத்தினர் விரும்பினார்கள். அதன்படி, துமகூரு முதல் தலகட்டபுராவிற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினேன். இது சந்தோஷமாக உள்ளது. எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று' என தெரிவித்துள்ளார்.
திருமண மண்டபத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மணமகனின் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
