VIDEO : திடீரென ஏற்பட்ட 'டிராபிக்'... கூட்டம் கூடி அதிர்ச்சியில் உறைந்து நின்ற 'பொதுமக்கள்'... இறுதியில் 'தலை' கீழாகி போன 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் என்னும் பகுதியின் சாலையோரம் நபர் ஒருவர் முழுவதுமாக வெள்ளை சீட் ஒன்றை போர்த்திக் கொண்டு தூங்கியுள்ளார்.

இதனை அவ்வழியே சென்ற பொது மக்கள் அனைவரும் சாலையோரம் ஒருவரின் சடலம் கிடைப்பதாக தவறாக நினைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மக்கள் அதிகம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் டிராபிக் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு சில நேரத்திற்கு முன் அந்த நபர் வெள்ளை ஷீட்டை விளக்கி விட்டு எழுந்துள்ளார்.
அந்த நபர் திடீரென எழுந்ததைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பின்னர், அவர் இறந்து போகவில்லை எனவும், அந்த துணியை போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்ததை அறிந்து, அங்கிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.
இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு மக்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
A man sleeping on road side was mistaken as dead body caused panic in Ghaziabad...लोग चैन से सोने भी नहीं देते. 😀 pic.twitter.com/UPMbeK9Csr
— Saurabh Trivedi (@saurabh3vedi) September 8, 2020

மற்ற செய்திகள்
