‘அள்ளிக் கொடுக்கவும்’... ‘ஒரு மனசு வேணும்’... ‘எல்லோரையும் வென்ற’... 'இந்திய அணியின் இளம் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Sep 08, 2019 12:25 AM
மைதானத்தின் ஊழியர்களுக்கு, தொடருக்கான தனது மொத்த ஊதியத்தையும் இந்திய ஏ அணியின் வீரர் ஒருவர் வழங்கி நெகிழ வைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணி, இந்திய ‘ஏ’ அணிக்கு எதிராக 5 அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டிகள், 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் ஒருநாள் போட்டிகள் அனைத்தும், கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதன் முதல் நான்கு போட்டியின் முடிவில் இந்திய ‘ஏ’ அணி, 3-1 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 5-வது போட்டியின்போது மைதானத்தில் நிலவிய அதிகமான ஈரப்பதம் காரணமாக, போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணியின் சஞ்சு சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். இந்நிலையில், இந்தப் போட்டியின் இறுதியில் சஞ்சு சாம்சன், ஒரு நெகிழ்ச்சியான முடிவை அறிவித்தார். அதாவது இந்தப் தொடருக்கான தனது மொத்த ஊதியத்தையும், மைதானத்தின் ஊழியர்களுக்கு அளிக்க உள்ளதாகக் கூறினார்.
இதுகுறித்து தெரிவித்த சஞ்சு சாம்சன், ‘இந்தப் போட்டிகள் நடைப்பெற்றதற்கு முக்கிய காரணம், மைதானத்தின் ஊழியர்கள்தான். ஏனென்றால் மழையினால் மைதானம் ஈரப்பதமாக இருந்தது. இதனைப் போக்க அவர்கள் தீவிரமாகப் பணியாற்றினர். அவர்கள் இல்லையென்றால், இந்தப் போட்டிகள் நடைப்பெற்று இருக்காது. ஆகவே அவர்களுக்கு என்னுடைய சம்பளமான, ரூபாய் 1.5 லட்சத்தையும் மைதானத்தின் ஊழியர்களுக்கு அளிக்க உள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் ரசிர்கள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
