108 அடி உயரம்.. வாள் மட்டுமே 4000 கிலோ.. உலகத்தை திரும்பி பார்க்கவச்ச இந்திய அரசரின் பிரம்மாண்ட சிலை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் கட்டப்பட்டுவரும் பிரம்மாண்ட கெம்ப கெவுடா சிலையில் பொருத்தப்பட இருக்கும் வாள் நேற்று பெங்களூரு வந்தடைந்தது.
கெம்ப கவுடா
16 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவின் பெரும்பான்மையான பகுதிகளை ஆட்சி செய்துவந்த கெம்ப கவுடா மக்களோடு மிகவும் அன்பாக பழகக்கூடியவர் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். 1513 இல் யெலஹங்காவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்த கவுடா விஜய நகர பேரரசு காலத்தில் முக்கிய ஆட்சியாளராக அறியப்பட்டார். கர்நாடகாவின் சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை அந்த காலத்திலேயே சிறப்பாக வடிவமைத்த பெருமை கெம்ப கவுடாவையே சேரும். இதனாலேயே இவரை பெங்களூருவை உருவாக்கியவர் என்று அழைக்கின்றனர் மக்கள்.
சிலை
கர்நாடகாவின் முக்கிய ஆட்சியாளர்களில் ஒருவராக அறியப்படும் கெம்ப கவுடாவிற்கு பெங்களூரு விமான நிலையத்தின் அருகே பிரம்மாண்ட சிலை பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருகின்றன. விமான நிலையத்தின் ஒரு பகுதியில் 23 ஏக்கர் பரப்பளவில் கெம்ப கவுடா பாரம்பரிய பூங்கா அமைந்துள்ளது. இங்கே 108 அடி உயரத்தில் கெம்ப கவுடாவிற்கு சிலை வடிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கெம்ப கவுடா கையில் வாள் ஏந்தியபடி இந்த சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பொருத்தப்பட இருக்கும் 4000 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட வாள் புது டெல்லியில் இருந்து நேற்று பெங்களூரு வந்தடைந்தது. 35 அடி நீளமுள்ள வாளை கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் சி.என்.அஷ்வத் நாராயண் வரவேற்றார். இதற்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.
85 கோடி
பத்ம பூஷன் விருதுபெற்ற புகழ்பெற்ற சிற்பியான ராம் வி சுதர் இந்த 85 கோடி மதிப்புள்ள சிலைவடிக்கும் பணிக்கு தலைமை வகிக்கிறார். மகாராஷ்டிராவின் துலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராம், நினைவுச்சின்ன சிற்பங்களை உருவாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ராம் சுதர் ஃபைன் ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெடை நிர்வகித்து வருகிறார்.
கர்நாடகாவின் முக்கிய ஆட்சியாளர்களில் ஒருவரான கெம்ப கவுடாவிற்கு அம்மாநில அரசு சிலை நிறுவுவது அந்த மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8