வேறலெவல்! சென்னை டூ பெங்களூருக்கு 25 நிமிஷத்துல போலாம்.. எப்படி?.. அசத்திய தமிழக மாணவர்கள்..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்சென்னை ஐஐடி மானவர்கள் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக சென்னையில் இருந்து பெங்களூருக்கு 25 நிமிடங்கள் பயணிக்கலாம் என்கிறார்கள் இந்த மாணவர்கள்.
அதிர்ச்சி! ஒரு பவுன் தங்கம் ரூ.1.5 லட்சம்.. Russia – Ukrine War-ன் தாக்கமா? எங்க தெரியுமா?
வளமான நாட்டிற்கான அடையாளமாக சமீப காலங்களில் போக்குவரத்தும் கருதப்பட்டு வருகிறது. தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்துகள் புழக்கத்திற்கு வந்துவிட்டாலும் மனித சமுதாயத்தின் தேவைகள் மட்டும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த சவாலை ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் முறியடிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
எலான் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைவரும் உலக பணக்காரர்களின் ஒருவருமான எலான் மஸ்க் தான் இந்த ஹைப்பர் லூப் ஐடியாவை முதலில் வெளியிட்டார். பொதுவாக ஒரு போக்குவரத்து சாதனம் இயங்கும் போது உராய்வு மற்றும் காற்று ஏற்படுத்தும் தடை ஆகியவை காரணமாக வேகம் மட்டுப்படுத்தப்படும்.
ஹைப்பர் லூப்
இந்த இரண்டு தடைகளையும் நீக்குவதே இந்த ஹைப்பர் லூப் தொழில்நுட்பம். உதாரணமாக சென்னை - பெங்களூரு பயணத்தை எடுத்துக்கொள்ளலாம். இரு நகரங்களுக்கு இடையே பிரம்மாண்ட குழாய் பொருத்தப்படும். இந்தக் குழாயினுள் இருக்கும் காற்றை வெளியேற்றி வெற்றிடத்தை உருவாக்குவார்கள். அதன்பிறகு டிரான்ஸ்போர்ட் பாட் (Transport Pod) எனப்படும் பயணிகள் பெட்டியை குழாயின் உள்ளே இணைப்பார்கள்.
மின்காந்தப்புல விலகலை (Maglev) பயன்படுத்தி இந்த பயணிகள் பெட்டி நகர துவங்கும். அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
புதிய சரித்திரம்
இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவர் குழு இந்த ஹைப்பர் லூப் குறித்த ஆய்வில் இறங்கியுள்ளது. 100 மீட்டருக்கு ஹைப்பர் லூப் வாகனத்தை இயக்கி ஏற்கனவே விருதுகளை பெற்றுள்ள இந்தக் குழு, அடுத்ததாக 500 மீட்டருக்கு ஹைப்பர் லூப் வாகனத்தை இயக்க இருக்கிறது. இது வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய போக்குவரத்து வரலாற்றின் புதிய சரித்திரம் படைக்கப்படும்.
வேகம்
வெற்றிடத்தில் உராய்வு, காற்றுத் தடை ஆகிய இரண்டுமே இல்லாததால் இந்த ஹைப்பர் லூப் வாகனத்தின் மூலமாக மணிக்கு 1,223 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். அதாவது, சென்னை - மும்பைக்கு ஒரு மணிநேரத்திலும் சென்னை - பெங்களூருக்கு 25 நிமிடத்திலும் பயணிக்கலாம்.