நூற்றுக்கணக்கான மக்கள் முன்பு வக்கீலுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழக எல்லையில் நடந்த ‘ஷாக்’..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்பு வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Bangalore advocate murdered near Tamilnadu border Anekal Bangalore advocate murdered near Tamilnadu border Anekal](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/bangalore-advocate-murdered-near-tamilnadu-border-anekal.jpg)
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பிடிஎம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞரான ராஜசேகர ரெட்டி. இவர் நேற்று தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஆனேக்கல் நீதிமன்றத்திற்கு வந்து வாதாடி விட்டு இரவு 8 மணியளவில் தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது ஆனேக்கல் சந்தாபுரம் அருகேயுள்ள வெங்கடேஸ்வர தியேட்டர் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அவரது காரை வழி மறித்துள்ளனர். இதனை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் முன்பு அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜசேகர ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராஜசேகர ரெட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் மக்கள் முன்பு வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)