உங்க கூட டேட்டிங் வரப்போற பொண்ணு இப்போ கூப்பிடுவாங்க.. கொஞ்ச நேரத்தில் வந்த போன்கால்.. மனம் உடைந்த சாப்ட்வேர் என்ஜினியர்
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு: டேட்டிங் செய்யலாமா என்று வந்த குறுஞ்செய்தியை பார்த்து இளம்பெண்ணிடம் சுமார் ரூ.88 ஆயிரத்தை இழந்த சாப்ட்வேர் என்ஜினீயர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, பெங்களூர் மாதிரியான பெரு நகரங்களில் இளைஞர்களை குறி வைத்து பல நூதன மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதிலும் பெரும்பான்மையாக ஆன்லைன், செல்போன் மெசேஜ் மூலமாக ஏமாற்றுகிறார்கள். இதனை உண்மை என நம்பிய பலர் பணத்தை இழந்த பின் தலையில் அடித்துக் கொண்டு புலம்புகின்றனர். ஒருவரை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று ஆராய்ச்சி செய்து மோசடி கும்பல் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஒரு நிறுவனம் போன்று அலுவலகத்தில் பணியாளர்களை நியமித்து மோசடியில் ஈடுபடுவதும் தற்போது தெரிய வந்துள்ளது.
'டேட்டிங்' செய்ய விருப்பமா?
பெங்களூரு மாவட்டம் எலகங்கா பகுதியை சேர்ந்த 42 வயதான கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் இளம் பெண் ஒருவரிடம் பணத்தை இழந்துள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் தன்னுடைய செல்போனுக்கு இளம்பெண்களிடமிருந்து 'டேட்டிங்' செய்ய விருப்பமா? என அடிக்கடி மெசேஜ் வந்ததாக கூறியுள்ளார்.
‘டேட்டிங்’ செய்ய இளம்பெண்களை ஏற்பாடு செய்து தருகிறோம்:
ஒரு முறை இந்த குறுந்தகவலில் வந்த செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது, எதிர்முனையில் பேசிய நபர் உங்களுடன் ‘டேட்டிங்’ செய்ய இளம்பெண்களை ஏற்பாடு செய்து தருகிறோம் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு ஒத்துக்கொண்ட அந்த நபர் இளம்பெண்களுடன் ‘டேட்டிங்’ செய்ய முன்பணமாக ரூ.1,200-ஐ செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய சிறிது நேரத்திலேயே இளம் பெண் ஒருவர் சுவாதி மிஸ்ரா என தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
போனில் அழைத்த இளம்பெண்:
அதுமட்டுமில்லாமல் தன்னை நேரில் கண்டு டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் அதற்கு மேலும் ரூ.86 ஆயிரத்து 900-ஐ செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார் அந்த பெண். இதை நம்பிய கம்ப்யூட்டர் என்ஜினீரும் அந்த பணத்தை கொடுத்துள்ளார்.
'டேட்டிங்' செய்யவில்லை:
ஆனால் அந்த பெண் அவருடன் 'டேட்டிங்' செய்யவில்லை என கூறியுள்ளார். மேலும், தன்னிடம் முதலில் பேசிய நபரின் செல்போன் என்னும், சுவாதி என்ற பெண்ணின் செல்போன் என்னும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
போலீசில் புகார் :
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.பணத்தை இழந்த நபர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

மற்ற செய்திகள்
