VIDEO: 1 மாசத்துல '50 சிம்'கார்டு மாத்தி இருக்காரு... டூப்ளிகேட் சாவி 'மிஸ்ஸிங்'... பரபரப்பு கிளப்பும் நடிகர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசுஷாந்த் சிங் ஒரு மாதத்தில் 50 முறை சிம்மை மாற்றி இருப்பதாக நடிகர் சேகர் சுமன் பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14-ம் தேதி தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார் இதுதொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி உட்பட சுமார் 30 பேருக்கும் அதிகமானோரை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். எனினும் அவர் என்ன காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
A fight to finish..at Sushan's house in Patna.won't give up no matter what.#justiceforSushantforum #CBIEnquiryForSushant pic.twitter.com/oydGzKFwIt
— Shekhar Suman (@shekharsuman7) June 29, 2020
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் சேகர் சுமன் சுஷாந்த் சிங் ஒரே மாதத்தில் 50 முறை சிம்கார்டை மாற்றியதாக பரபரப்பு கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக பீஹார் மாநிலம் பாட்னா சென்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவை சந்தித்து சுஷாந்த் சிங் விஷயம் பற்றி பேசியுள்ளார்.இதுகுறித்து சேகர் சுமன் கூறுகையில், '' சுஷாந்த் தற்கொலைக்கு பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 50 முறை அவர் தன்னுடைய செல்போன் எண்ணை மாற்றி இருக்கிறார்.
அவர் ஏன் அப்படி செய்தார்? யாரை தவிர்க்க அவ்வாறு செய்தார்? சுஷாந்த் போன்ற ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஏன் எதுவும் எழுதி வைக்கவில்லை. அந்த வீட்டின் டூப்ளிகேட் சாவி ஏன் இடம்மாறி இருந்தது? பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தாரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். நான் அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் கோவிட் 19 பிரச்சனையால் நிதிஷ் குமார் யாரையும் சந்திப்பது இல்லை என்றார்கள். தேஜஸ்வி என்னை சந்திக்கும்போது நிதிஷ் குமாரால் ஏன் முடியவில்லை? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதே நேரம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மகாராஷ்டிரா மாநில முதல்வரை தொடர்பு கொண்டு சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.