'தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றம்'... 'புதிய எஸ்.பி நியமனம்'... தமிழக அரசு உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் மாற்றப்பட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டனர். இந்தச்சூழ்நிலையில் தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் தென் மண்டல ஐ.ஐி சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெறுவதால் புதிய ஐ.ஜி.யாக எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஐி,யாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முருகன் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி' யாக இருந்து வந்தவர். இதனிடையே தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Superintendent of Police (SP) Thoothukudi district removed from his position. S Jeyakumar, SP Viluppuram to take charge as SP, Thoothukudi. #TamilNadu pic.twitter.com/u5lJyrJ8cR
— ANI (@ANI) June 30, 2020

மற்ற செய்திகள்
