‘லத்தியால் அடித்ததாக நேரடி சாட்சி வாக்குமூலம்!’.. சாத்தான்குளம் சம்பவத்தில் மாஜிஸ்திரேட் அறிக்கையால்.. பரபரப்பு திருப்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான் குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், மரணம் அடைந்தனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு வகையிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனிடையே சாத்தான் குளம் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸாரை விசாரிக்கவும் கோரிக்கைகள் வலுத்தன. அதன் பின் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதன் முக்கிய திருப்பமாக, “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்ததாக நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்” என்று உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் விசாரணையின் போது லத்தியில் ரத்தக்கறையை பார்த்ததாக கான்ஸ்டபிள் ரேவதி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், இந்த ஆதாரங்கள் வீடியோப் பதிவுகளாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
