VIDEO: ரகு கணேஷை தொடர்ந்து, அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் - ஒரே இரவில் CBCID அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் தந்தை மகன் மரண விவகாரத்தில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளிகள் அனைவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணித்த சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் 4 காவலர்கள் மீதான வழக்கினை சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்காக மாற்றியதோடு, முதலில் எஸ்.ஐ ரகு கணேஷை அதிரடியாக கைது செய்தனர். இதனை அடுத்து எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்டோர் தீவிரமாக தேடப்பட்டதை அடுத்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக சாத்தான்குளம் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் இன்பெக்டர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவரை விசாரித்த சிபிசிஐடி போலீஸார் தற்போது அவரையும் இவ்வழக்கில் தொடர்புடைய 5வது நபராக கைது செய்தனர்.

மற்ற செய்திகள்
