2 நாட்களில் 'இறந்து' போன புது மாப்பிள்ளை... உண்மையை 'மறைத்த' பெற்றோரால்... அடுத்தடுத்து '111 பேருக்கு' காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணமான 2 நாட்களில் புது மாப்பிள்ளை இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பீஹார் மாநிலம் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 2 நாட்களில் மணமகன் இறந்து போயுள்ளார். அவருடைய பெற்றோர் அதிகாரிகளுக்கு எந்த தகவலும் அளிக்காமல் அவரது உடலை தகனம் செய்து விட்டனர்.
இதனால் அவருக்கு கொரோனா இருந்ததா? என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், மே 12-ம் தேதி மணமகன் கொரோனா அறிகுறிகளுடன் தன்னுடைய கிராமத்திற்கு திரும்பியுள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் அதுகுறித்து கவலை இல்லாமல் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருமணம் முடிந்த 2 நாட்களில் மணமகன் உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதையடுத்து அருகில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அவரை கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதையறிந்த அதிகாரிகள் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய இதுவரை 111 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால் மணப்பெண்ணுக்கு கொரோனா இல்லை. திருமண நிகழ்வில் 50 பேருக்கு மேல் பங்கேற்றது, மணமகன் இறந்ததை அதிகாரிகளிடம் இருந்து மறைத்து தகனம் செய்தது போன்றவற்றால் குடும்பத்தினர் விதிமீறலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
