'தற்கொலை' செய்துகொண்ட பெண் போலீஸ்... வாக்குமூல 'வீடியோ' வெளியானதால் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தற்கொலை செய்துகொண்ட பெண் போலீசின் வாக்குமூல வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
![Woman Police Suicide near Trichy, Police Investigate Woman Police Suicide near Trichy, Police Investigate](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/woman-police-suicide-near-trichy-police-investigate.jpg)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் பவானி(34). இவர் கடந்த 28-ம் தேதி பணியில் இருக்கும்போதே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பவானி தற்கொலைக்கு முன் அதற்கான காரணம் என்னவென்பதை வீடியோவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் குளிர்பானத்தில் விஷம் கலக்குவது, அருந்துவது, தற்கொலைக்கான காரணம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த வீடியோவில், '' 2 பெண் போலீசாரிடம் தலா 8 லட்ச ரூபாய் கொடுத்துள்ளேன். அவர்கள் பணத்தை திருப்பி தராமல் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இழுத்தடிக்கின்றனர்.
இந்த வேதனை ஒரு பக்கம் என்றால் மறுபுறம் கடந்த 2 நாட்களாக தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் எனக்கு கொரோனாவாக இருக்குமோ? என்று பயமாக இருக்கிறது. என்ன பண்றதுண்ணே தெரியல. எல்லாரும் ஏமாத்துறாங்க,'' என தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)