தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் இறந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணமான போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் மற்றும் சாத்தான்குளம் வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இன்று சாத்தான்குளம் சென்று ஜெயராஜ் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஜெயராஜ் குடும்பத்தினரிடம் பயப்பட வேண்டாம் என கூறி அவர்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக எஸ்.ஐ ரகு கணேஷ் சற்றுமுன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மற்ற செய்திகள்
