தமிழக அரசு அதிரடி! - ஒரே இரவில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் டிரான்ஸ்பர்! முழு விபரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பெருநகர் காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதுள்ள காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக சாத்தான்குளம் மரணத்தில் தொடர்புடைய மூன்று அதிகாரிகளும் கட்டாய காத்திருப்பில் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து தூத்துக்குடி SP காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பியாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் சென்னையின் புதிய ஆணையராக மகேஷ்குமார் அகர்வால், மதுரையில் புதிய ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் மத்திய மண்டல ஐஜியாக ஜெயராம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
