"எது, என் அக்கவுண்ட்'ல ரூ.2,700 கோடியா??.." 100 ரூபா எடுக்க போன கூலி தொழிலாளிக்கு வந்த மெசேஜ்.. அடுத்து கொஞ்ச நேரத்துல நடந்த 'ட்விஸ்ட்'
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து, 100 ரூபாய் எடுத்திருந்த நிலையில், அதன் பின்னர் வந்த மெசேஜை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப் போய் உள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம், கமல்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பிஹாரி லால். 45 வயதாகும் இவர், சமீபத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 100 ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். பணத்தை எடுத்ததும் வழக்கம் போல, அக்கவுண்டில் உள்ள மீதி பணம் தொடர்பாக மெசேஜ் ஒன்றும் பிஹாரியின் மொபைல் போனுக்கு வந்துள்ளது.
அதை கண்டதும் ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சியில் உறைந்தே போனார் பிஹாரி. இதற்கு காரணம், அவரது அக்கவுண்டில் சுமார் 2,700 கோடி பணம் இருப்பதாக வந்த மெசேஜ் தான்.
இது தொடர்பாக வங்கியில் உள்ள ஆபரேட்டரிடமும், தனது மெசேஜ் தொடர்பாக பிஹாரி லால் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த நபரும், பிஹாரி லால் வங்கி கணக்கில், சுமார் 27 ஆயிரம் கோடி பணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் பிஹாரி, தன்னுடைய அக்கவுண்டில் எப்படி இத்தனை ஆயிரம் கோடி பணம் வந்தது என்பது புரியாமல் விழித்துள்ளார். தினமும் சுமார் 600 முதல் 800 வரை சம்பாதித்து வரும் பிஹாரிக்கு, பருவநிலை காரணமாக, செங்கல் சூளைக்கும் சமீபத்தில் பிஹாரி வேலைக்கு போவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து பேசும் பிஹாரி லால், "முதலில் வங்கி ஆபரேட்டரிடம் இது பற்றி கேட்டபோது, அவர் 2,700 கோடி பணம் வங்கி கணக்கில் இருப்பது பற்றி சொன்னதும் புரியாமல் விழித்தேன். தொடர்ந்து, நான் மீண்டும் மீண்டும் அவரிடம் உறுதிப்படுத்தி கேட்கவே, 2,700 கோடி எனது கணக்கில் இருந்த வாங்கி Statement ஒன்றையும் எடுத்துக் காட்டினார்" என கூறி உள்ளார்.
ஆனால் பிஹாரி லால், சந்தோஷம் ஒரு சில மணி நேரமே நீடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், அருகில் உள்ள வேறு வங்கி கிளையில் அவர் பரிசோதித்த போது தனது வங்கி கணக்கில் 126 ரூபாய் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வங்கி முதன்மை அதிகாரி ஒருவர் பேசுகையில், இது வங்கி கணக்கில் நடந்த பிழையாக இருக்கலாம் என்றும், வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
126 ரூபாய் மட்டுமே இருந்த வங்கி கணக்கில் திடீரென 2,700 கோடி தோன்றி பின்னர் மறைந்த சம்பவம் பலரையும் குழப்பத்தில் உள்ளது.

மற்ற செய்திகள்
