புதிதாக '30 பேருக்கு' பாதிப்பு... கொரோனா தோன்றிய 'வுஹான்' நகரத்தை... குறைந்த 'அபாயப்பகுதியாக' அறிவித்த சீனா!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 07, 2020 02:51 AM

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தான் முதன்முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய இந்த வைரஸ் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மேற்கண்ட நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது.

Nine districts in China\'s Wuhan classified as ‘low-risk\'

இந்த நிலையில் கொரோனா தோன்றிய வுஹான் நகரத்தை சீன அரசு குறைந்த அபாய பகுதியாக அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சீனாவில் கடந்த 15 நாட்களில் புதிதாக கொரோனா வைரஸ் தாக்காத பகுதிகள், குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாகவும், 50 பேருக்கு குறைவாக தாக்கிய பகுதிகள் ‘நடுத்தர அபாய பகுதி’களாகவும், 50 பேருக்கு மேல் தாக்கிய பகுதிகள், ‘அதிக அபாய பகுதி’களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன் வுஹான் நகரில் உள்ள 13 நிர்வாக பகுதிகளில் 9 நிர்வாக பகுதிகள் குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் அங்கு இயல்பு நிலை மீண்டும் திரும்ப ஆரம்பித்து இருக்கிறது. அதே வேளையில் நாடு முழுவதும் 30 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதேபோல அறிகுறியே இல்லாமல் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குறிப்பிடத்தக்கது.