ஊழியர்கள்' தான் எங்களோட சொத்து... அவங்க 'கஷ்டப்படுறதுக்கு' நாங்க விடமாட்டோம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவ ஆரம்பித்து இருக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

மறுபுறம் ஊரடங்கு காரணமாக வேலையிழந்த தொழிலாளர்கள் பலருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் களத்தில் இறங்கி உதவி செய்ய ஆரம்பித்து இருக்கின்றன. தங்கள் ஊழியர்களின் துயர் துடைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைளை அந்நிறுவனங்கள் எடுக்க ஆரம்பித்து இருக்கின்றன. அந்த வகையில் ஆசியாவின் முன்னணி பெயிண்ட் நிறுவனங்களில் ஒன்றான நிப்பான் பெயிண்ட் நிறுவனம் பெயிண்டர்களின் துயரை துடைக்க தற்போது களமிறங்கி உள்ளது.
இதற்காக தமிழகத்தை சேர்ந்த சுமார் 1000 ஆயிரம் பெயிண்டர்களுக்கு அமுத சுரபி என்னும் டிஜிட்டல் கார்டு ஒன்றினை நிப்பான் நிறுவனம் வழங்கி நிதி உதவி செய்திருக்கிறது. இதில் ஒரு முன்முயற்சியாக அந்த கார்டுகளுக்கு டாப் அப் செய்து அருகில் உள்ள மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெயிண்டர்கள் வாங்கிட உதவுகிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இந்திய அலங்காரங்கள் பிரிவு தலைவர் எஸ்.மஹேஷ் ஆனந்த், ''எங்களது முக்கிய பங்குதாரர்களாகத் திகழும் பெயிண்டர்களுக்கு ஆதரவினை தொடர்ந்து வழங்குவதில் நிப்பான் பெயிண்ட்ஸ் எப்போதும் முன்னணியில் நின்றுள்ளது.
கொரோனா பேரிடர் உலகை உலுக்கியுள்ள நிலையில், பெரும்பாலும் தினசரி கூலியை சார்ந்திருக்கும் எங்களது பெயிண்டர்கள் சந்திக்கும் தாக்கங்களை இயன்ற அளவு குறைக்க நாங்கள் உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளோம். அவர்களது குடும்பத்தின் நிலைத்திருத்தலுக்கும் மற்றும் இப்பேரிடரை ஒன்றாகக் கடக்கவும் இது குறிப்பிடத்தக்க உதவியாகும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜப்பானில் நிறுவப்பட்ட எங்களது நிப்பான் பெயிண்ட் 140 வருடங்கள் அனுபவம் வாய்ந்தது. ஆசியாவின் முன்னணி பெயிண்ட் நிறுவனங்களில் ஒன்றான நிப்பான் பெயிண்ட், உலகின் முன்னணி பெயிண்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது,'' என்றார்.
