ஊரடங்கு உத்தரவால்... 'சென்னைக்கு' கிடைத்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் காற்றின் மாசு வெகுவாக குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் வெகுவாக உள்ளது. சமீபத்தில் கங்கை, யமுனை நதிகளின் தரம் உயர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதோடு காற்று மாசால் மிகவும் அவதிப்பட்டு வந்த டெல்லியிலும் தற்போது காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது.

இதேபோல பஞ்சாபின் ஜலந்தர் பகுதியில் இருந்து அப்பகுதி மக்களால் இமயமலையை காண முடிந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்த நிலையில் சிங்கார சென்னையிலும் காற்று மாசு குறைந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று மாசு என்பது காற்றில் உள்ள கந்தக டை ஆக்ஸைடு நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு ஆகிய மாசுகளின் கணக்கீட்டு தொகுப்பாகும்.
சென்னையை பொறுத்தவரை காற்று மாசு குறியீடு சராசரியாக 100-200 என்ற அளவிலும் தீபாவளி போன்ற சமயங்களில் 300 என்ற அளவிலும் இருக்கும். தற்போது ஊரடங்கு உத்தரவால் இன்று காலை 11 மணி நிலவரப்படி சென்னையில் காற்று மாசு குறியீடு எண் 48 ஆக உள்ளது என மத்திய மாசுக்கப்பட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன்படி தற்போது சென்னையில் வீசும் காற்று மக்கள் சுவாசிக்க தகுந்தது ஆகும்.
