'மாவு' என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தில் ... 'போண்டா' செய்த ''இளம்பெண்'' ... இறுதியில் நேர்ந்த 'பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் பெரியசாமி என்பவரிடம் தனது மருமகள், போண்டா செய்வதற்காக மைதா மாவு வாங்கி வர கூறியுள்ளார். மைதா மாவு வாங்கி வந்த பெரியசாமி அதனுடன் சேர்த்து பூச்சிக்கொல்லி மருந்தையும் வாங்கி வந்ததாக தெரிகிறது.

இரண்டும் மாவு தான் என நினைத்த மருமகள் இரண்டையும் கலந்து போண்டாவை செய்துள்ளார். அந்த போண்டாவை தனது கணவர், மாமியார், மாமனார் என மொத்த குடும்பத்துடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணும் சாப்பிட்டுள்ளார். நான்கு பேருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மருமகள் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரக்கோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
