“இனி 30 நிமிஷத்துல கொரோனா ரிசல்ட்!”.. தயாராகும் 1 லட்சம் ராப்பிட் கொரோனா டெஸ்ட் கிட்”! .. பீலா ராஜேஷ் அதிரடி .. வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு முதல்வரின் ஒப்புதலோடு, 21 மெஷின்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், கொரோனா பரிசோதனை முடிவுகளை வெகுவேகமாக 30 நிமிடத்துக்குள் அறிந்துகொள்ள 1 லட்சம் ராப்பிட் பரிசோதனை கிட்களை களமிறக்கவுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை பீலா ராஜேஷின் அதிரடியான களச் செயல்பாடு இந்த கொடிய கொரோனா காலத்தில் பேசுபொருளாகவே மாறியுள்ளது. தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள், அவர்களை கண்காணிப்பது, அவர்களின் பாதிப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்து ஊடகங்களுக்கு அறிவிப்பது என பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சோதனைக்குட்படுத்தப்பட்டவர்கள், இன்னும் முடிவுகள் வெளியாகாதவர்கள் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 1 லட்சம் பரிசோதனை கிட்களை களமிறக்கவுள்ளதாகவும், அதனை ராப்பிட் பரிசோதனை கிட் என்றும் குறிப்பிட்ட பீலா ராஜேஷ், அதற்கான பயிற்சிகளையும் ஜியோ மேப், ஹாட் ஸ்பாட் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு ஒரு மைக்ரோ ப்ளான் தயார் செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
