'இண்டெர்நெட் இல்லாமலேயே'... 'இனி இதெல்லாமும் பண்ணலாம்'... 'அதுவும் உங்கள் மொழியிலேயே'... ‘கூகுள் அசிஸ்டெண்ட்டில் புதிய சேவை'!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Sangeetha | Sep 20, 2019 02:02 PM
கூகுள் இந்தியா என்பதன் மூலம், கூகுளில் பல புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது, ஆண்ட்ராய்டு ஃசெல்போன் பயனாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இனி இணைய சேவை இல்லாமலேயே, கூகுள் அசிஸ்டெண்ட் சேவையைப் பயனாளர்களால் பயன்படுத்த முடியும். அதுவும் தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் உருது ஆகிய 9 மொழிகளில், கட்டளையிடலாம். அதாவது தமிழில் என்னுடன் பேசுங்கள் என்று கேட்பதன் மூலம். கூகுள் அசிஸ்டெண்ட் வசதியை தமிழில் பேச வைத்து சேவையை பெறலாம்.
டொமினோஸ்-லிருந்து பீட்சா ஆர்டர் செய்வது, ஓலா கேப் புக் பண்ணுவது, வங்கிக் கணக்கில் இருப்பை சரிபார்ப்பது, பாதை கேட்பது, தகவல் அறிவது, சந்தேகங்களைக் கேட்டு அறிவது போன்றவற்றை, தமிழ் போன்ற அவரவர் மொழியிலேயே கேட்கலாம். மேலும் இண்டெர்நெட் சேவை இல்லாமல், உதவி கேட்கலாம். இதற்காக, வோடபோன்-ஐடியாவுடன் கூகுள் நிறுவனம் இணைந்துள்ளது. 000-800-9191-000 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்குத் தொடர்பு கொண்டு, பயனாளர்கள் தங்களது கேள்விகளைக் கேட்டால், தொலைபேசி அழைப்பின் மூலமாகவே விடையைப் பெறலாம்.
இதுகுறித்து கூகுள் தயாரிப்பு மேலாண்மை துணைத்தலைவர் மேனுவல் ப்ரான்ஸ்டீன் கூறுகையில், ‘சர்வதேச அளவில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக, கூகுள் அசிஸ்டெண்ட் பயன்படுத்தும் வரிசையில், 2-ம் இடத்தில் இந்தி மொழி உள்ளது. இதனாலே இந்தியா மீது கூகுள் நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது. இந்தியாவுக்கு ஏற்ற பல அப்டேட்களை, இந்தியர்களைக் கவரும் வண்ணம் கூகுள் மேம்படுத்தி வருகிறது’ என்றார். இந்த சேவைகள் அனைத்தும் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.