‘நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள்’.. காஷ்மீர் விவகாரத்தில் ‘ரஜினிகாந்த் காட்டம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 14, 2019 08:32 PM
காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்தைக் கையாண்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த், “காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பயங்கரவாதிகளின் நுழைவிடமாக காஷ்மீர் இருந்த நிலையை, ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மோடி மற்றும் அமித்ஷா மாற்றி இருக்கிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது. எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்கக் கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் தமிழகத்தின் அரசியல் மையமாக போயஸ்கார்டன் மாறுமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்துள்ளார்.
தேசிய விருதுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது. அது ஏமாற்றம்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
