‘ஏடிஎம் சேவையில் புதிய மாற்றம்’.. ‘ரிசர்வ் வங்கி’ வெளியிட்டுள்ள ‘முக்கிய அறிவிப்பு..’
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 15, 2019 01:54 PM
தொழில்நுட்பக் காரணங்களால் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாமல் போனால் அதை இலவச பரிவர்த்தனையில் சேர்க்கக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்-களில் இருந்து மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்-களில் இருந்து மாதம் 3 முறையும் கட்டணமில்லாமல் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த வரம்பைத் தாண்டி பணம் எடுக்கும்போது அதற்கு தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் பண இருப்பை பார்ப்பது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாமல் எடுக்க முடியாமல் போவது போன்றவையும் பரிவர்த்தனையாக சேர்க்கப்படுகிறது.
இந்நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஹார்டுவேர், சாஃப்ட்வேர் பிரச்சனைகளால் பணம் எடுக்க முடியாதபோது அதை பரிவர்த்தனை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருப்பை பார்ப்பது, காசோலை புத்தகம் வழங்கக் கோருவது, வரி செலுத்துவது, பண பரிமாற்றம் போன்ற ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை இலவச பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.