‘பார்க்க கோபுர கலசம் மாதிரி இருக்கும்...’ ஆனா இதோட பேரு ‘போயா’...! - கடலில் ஒதுங்கிய மர்ம பொருள் குறித்த பல தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பரங்கிப்பேட்டை அண்ணங்கோவில் கடற்கரையில் நேற்று முன்தினம் (11-11-2020) மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது.
![Parangipettai mysterious object \'poya\' was lying the beach Parangipettai mysterious object \'poya\' was lying the beach](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/parangipettai-mysterious-object-poya-was-lying-the-beach.jpg)
உடனடியாக அண்ணங்கோவில் கடலோர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது மஞ்சள் நிறத்தில் கோபுர கலசத்தின் வடிவில் கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பொருளை மீட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர். தீவிர விசாரணையில், அந்த பொருள் கடற்கரை பகுதியான புதுக்குப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் அனல் மின் நிலையத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது.
அனல் மின் நிலையத்தின் பைப் லைன்கள் கடலுக்கு அடியில் செல்வதால் பைப் லைன்கள் இருக்கும் இடம் குறித்து மீனவர்களுக்கு தெரிவிக்கும் ‘போயா’ என்ற மிதவை கருவி எனவும் தெரிய வந்தது. இது கடலில் மிதக்கும் போது அறுந்ததால் அலையில் அடித்து கொண்டு வந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி, தனியார் அனல்மின் நிலையத்திற்கு சொந்தமானது என கூறப்படுவது உண்மைதானா என்பதை உறுதி செய்த பிறகு, தனியார் நிறுவனத்திடம் அந்த பொருள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)