'அவங்கள உரு தெரியாம அழிப்பேன்'!.. சபதம் எடுத்த அதிபர் பைடன்!.. காபூலில் பதுங்கியிருந்த மர்மம்!.. பழி தீர்க்க போகும் அமெரிக்கா!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Aug 27, 2021 12:40 PM

காபூலில் நடந்த தீவிரவாத தாக்குதல் அமெரிக்காவுக்கு விரிக்கப்பட்ட வலையாக இருக்கலாம் என அங்கு நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

joe biden kabul attackers we will hunt you down make you pay

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தை ஆப்கானியர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (26.8.2021) விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலிலும் மற்றொரு குண்டுவெடித்தது.

காபூல் விமான நிலைய இரட்டை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் அமெரிக்க மக்களிடையே அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். அதில், காபூல் நகரில் செயல்பட்டுவரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

மேலும், தமது அரசாங்கம் ஐ.எஸ் தீவிரவாதிகளை மொத்தமாக கருவறுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். அமெரிக்க மக்களை காயப்படுத்த நினைக்கும் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் என தொடர்ந்து பேசிய பைடன், "நாங்கள் மன்னிக்கவோ, மறக்கவோ போவதில்லை. அமெரிக்கா கண்டிப்பாக உங்களை வேட்டையாடும், உரிய விலையை கொடுத்தே தீர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, அமெரிக்க மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்காக போராடவும் எப்போதும் தமது அரசாங்கம் முன்வரிசையில் நிற்கும் என்றும் பைடன் உறுதியளித்தார்.

காபூல் விமான நிலையம் அருகே முன்னெடுக்கப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 12 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 140க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். மேலும், சில மணி நேரங்களுக்கு பின்னர் 3வது வெடிகுண்டு தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Joe biden kabul attackers we will hunt you down make you pay | World News.