திமிங்கலங்களுக்கு கொரோனா...! 'இது ரொம்ப டேஞ்சர்...' - ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் இயற்கை தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொண்டது என எண்ணிக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் மனித சமூகம் அதன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது எனலாம்.

கொரோனா ஊரடங்கு முடிந்து மனிதர்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் இயற்கையும் அதன் உயிரினங்களும் முன்பு போல் தன் பாதிப்பை உணர்ந்து கொண்டிருக்கின்றனர்.
பொதுவாக மனிதர்கள் பயன்படுத்திய கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதன் காரணமாக டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என கனடாவில் உள்ள டல்ஹௌசி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
அக்குழு சுமார் 36 வகையான கடல் பாலூட்டிகளில் நடத்திய ஆய்வில், அவை சார்ஸ் கோவி 2 (SARS-CoV-2)வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலை பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
