'தம்பி டெடிகேஷன் இருக்கலாம், அதுக்காக'... 'இளைஞர் செய்த விபரீதம்' ... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 14, 2020 04:49 PM

புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் இளைஞர் ஒருவர் செய்த காரியம், அவருக்கே வினையாக முடிந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Video : Young Boy falling into sea while taking Photos

புகைப்பட கலைஞர்கள் ஒரு புகைப்படத்தை எடுப்பதற்காக பல விதங்களில் வித்தியாசமாக முயற்சி செய்து புகைப்படங்கள் எடுப்பது வழக்கம். அவ்வாறு எடுக்கும் பபுகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாவது வழக்கம். சமீபத்தில் கூட கேரளாவில் நடந்த திருமணதிற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியது.

இந்நிலையில் வித்தியாசமாக புகைப்படம் எடுப்பதற்காக முயற்சி செய்த இளைஞர் ஒருவர், தவறி கடலுக்குள் விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கப்பலில் நின்று கொண்டு அந்த நபர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் சென்று புகைப்படம் எடுப்பதற்காக முயன்ற போது எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறி விழுந்து விட்டார். அப்போது கூட தன்னுடைய கேமராவை அவர் காப்பாற்ற முயற்சி செய்தார். இப்படி ரிஸ்க் எடுத்து புகைப்படம் எடுக்கணுமா, என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.