Kaateri logo top

"எதுக்கு எக்ஸ்ட்ரா 5ரூ கொடுக்கணும்?".. வாட்டர் பாட்டில் வாங்குனப்போ வந்த தகராறு.. ஓடுற ரயிலில் இளைஞருக்கு நிகழ்ந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Aug 08, 2022 08:28 PM

உத்திர பிரதேசத்தில் வாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக கேட்ட விற்பனையாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட இளைஞரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசிய கும்பலை ரயில்வே காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Pantry staff throws man off train after tussle over water bottle price

Also Read | "Card மேலே இருக்க நம்பர் சொல்லுங்கோ மேடம்".. 4 லட்சம் அபேஸ்.. பக்கவா பிளான் போட்டு.. கடைசில மண்டை மேல இருந்த கொண்டையை மறந்த கும்பல்..!

வாக்குவாதம்

உத்திர பிரதேசத்தின் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் ரவி யாதவ். இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது சகோதரி வீடு அமைந்திருக்கும் லலித்பூர் பகுதிக்கு ராப்தி சாகர் ரயிலில் பயணித்திருக்கிறார். அப்போது விற்பனையாளரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கியிருக்கிறார் ரவி. விற்பனையாளர் 20 ரூபாய் தரும்படி கேட்க, ரயில்வே நிர்வாகம் 15 ரூபாய் தான் தண்ணீர் பாட்டிலுக்கு விதித்திருப்பதாகவும் கூடுதலாக 5 ரூபாய் எதற்காக தரவேண்டும் என ரவி கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

Pantry staff throws man off train after tussle over water bottle price

இதனையடுத்து, அந்த விற்பனையாளர் சக ஊழியர்களை அழைத்திருக்கிறார். மூவரும் சேர்ந்து தன்னை ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிக்கு இழுத்துச் சென்றதாக ரவி தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். லலித்பூர் ரயில்வே ஸ்டேஷனில் தன்னை இறங்க மூவரும் அனுமதிக்கவில்லை என்றும், ரயில் நிலையத்தை கடந்து சென்றதும் அவரை ரயிலில் இருந்து தூக்கி வீசியதாகவும் ரவி தனது புகாரில் கூறியுள்ளார்.

சிகிச்சை

ஓடும் ரயிலில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்ட ரவி படுகாயமடைந்திருக்கிறார். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த மக்கள் ரவியை மீட்டு அருகில் இருந்த ஜான்சி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். பின்னர் இது தொடர்பாக லலித்பூர் ரயில்வே காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் ரவி. இந்நிலையில், ரவியின் புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இதுவரையில் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய லலித்பூர் ரயில்வே காவல்நிலைய அதிகாரி நவீன் குமார்," ரவி யாதவ்  ஒருவரை ரயிலில் இருந்து தள்ளிய விற்பனையாளர் என்று அடையாளம் காட்டியுள்ளார். இருப்பினும், மேலாளரை அடையாளம் காணவில்லை, இருப்பினும், மேலாளருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்" என்றார். இந்நிலையில் இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Also Read | CWG 2022: "சாம்பியன்களின் சாம்பியன்".. சாதனை படைத்த பிவி சிந்து.. பிரதமர் மோடி வாழ்த்து..!

Tags : #UTTARPRADESH #PANTRY STAFF #TRAIN #TUSSLE #WATER BOTTLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pantry staff throws man off train after tussle over water bottle price | India News.