போலியான வழக்குல 20 வருஷம் ஜெயில்.. வெளியே வந்து கல்யாணம் செஞ்ச நபர்.. அடுத்தநாளே பொண்டாட்டி கொடுத்த அதிர்ச்சி.. பாவம்யா மனுஷன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் திருமணமான அடுத்தநாளே கணவனை விட்டு நகை மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றிருக்கிறார் இளம்பெண் ஒருவர். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | "லாலிபாப் குடுத்து சமாதானம் பண்ணிடுவீங்களா..?".. சுகாதரமற்ற பள்ளி கழிவறை .. நீதிபதிகள் அதிரடி உத்தரவு.!
உத்தர பிரதேச மாநிலம் கோட்வாலி மெஹ்ரானி-ல் உள்ளது சில்வான் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விஷ்ணு திவாரி மீது 2000 ஆம் ஆண்டு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வருடக்கணக்கில் நடந்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு திவாரி நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிறையில் இருந்து விடுதலை அடைந்திருக்கிறார் திவாரி. தற்போது அவருக்கு வயது 40 ஆகும்.
திருமணம்
தனிமையில் வாடிய விஷ்ணு வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் ஒரு இளைஞர் திவாரியை சந்தித்து அவருக்கு திருமணத்துக்கு பெண்தேடி தருவதாக கூறியுள்ளார். மேலும், பெண் ஒருவரின் புகைப்படத்தையும் அவர் திவாரியிடம் காட்டியுள்ளார். இதனை நம்பிய திவாரி திருமணத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.
அந்த இளைஞர் சொல்லியபடியே அருகில் இருந்த ஊரில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. கல்யாண செலவுகளுக்காக ஒரு லட்ச ரூபாய் வேண்டும் என பெண் வீட்டார் கேட்டிருக்கின்றனர். மேலும், இளைஞர் புரோக்கர் கமிஷனாக 20 ஆயிரம் கேட்கவே இருவருக்கும் பணம் கொடுத்திருக்கிறார் திவாரி. இதனையடுத்து திருமணத்திற்காக காத்திருந்திருக்கிறார் அவர்.
அதிர்ச்சி
அந்த புரோக்கர் சொல்லியபடியே அருகில் இருந்த ஊரில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பிறகு மணமகளை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு திரும்பியிருக்கிறார் திவாரி. அடுத்தநாள் தனது அம்மா அருகில் உள்ள ஊருக்கு வருவதாகவும் அவரை சென்று பார்க்கவேண்டும் எனவும் மணமகள் கூறியிருக்கிறார். இதனை நம்பிய திவாரியும் தனது மனைவியை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.
அப்போது, தனக்கு தாகம் எடுப்பதாக கூறியுள்ளார் அந்த பெண். உடனடியாக அருகில் இருந்த கடைக்கு தண்ணீர் பாட்டில் வாங்க சென்றிருக்கிறார் திவாரி. அவர் திரும்பிவந்த போது, அந்த புரோக்கர் இளைஞருடன் மனைவி ஓடுவதை பார்த்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அவர்களை பிடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரால் முடியவில்லை. இதனையடுத்து உள்ளூரில் அந்த பெண் குறித்து விசாரித்திருக்கிறார். அப்போதுதான், பெண் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது.
இதுவரையில், இதேபோன்று 4,5 பேரை அந்த பெண் ஏமாற்றியதாக கிராம மக்கள் கூறியதும் திவாரி அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனையடுத்து காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார் திவாரி. திருமணத்தின் போது, தான் கொடுத்த நகைகளையும் எடுத்துக்கொண்டு மனைவி சென்றுவிட்டதாக திவாரி புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டும் அல்லாமல் மனைவியின் பெற்றோரும் போலியானவர்கள் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.