"இதுக்கு நல்ல ஒரு பேரா வைங்கப்பா".. கேரளாவில் 'பப்பட சண்டை'.. கேப்ஷன் போட்டு கலக்கிய ஆனந்த் மஹிந்திரா!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
அந்த வகையில், தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு, மிகவும் வேடிக்கையான ஒரு விஷயத்தை பற்றி உள்ளதால் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில், கேரள மாநிலத்தில் நடந்த திருமண நிகழ்வின் போது, அப்பளத்தால் அடிதடியே உருவானது. விருந்தினர்களுக்கு இரண்டாவது முறை அப்பளம் கொடுக்கவில்லை என்பதால் தகராறு வெடிக்கவே, கடைசியில் கைகலப்பு வரையும் போனது. இதன் காரணமாக, சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் பொருட்கள் வரை சேதமடைந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இது தொடர்பான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, தன்னுடைய கேப்ஷனில் தனக்கே உரித்தான பாணியில் சில வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார்.
"பப்படங்களுக்காக சண்டையிடுவது" என்ற விஷயத்தின் பொருள்படும் புதிய வார்த்தையை உருவாக்குவாதற்கான ஆலோசனைகளை வரவேற்கிறேன்" என குறிப்பிட்டு, வேடிக்கையாக சில வார்த்தைகளையும் அதில் இடம்பெற செய்திருந்தார். மேலும், "சில நேரங்களில் மிகவும் வினோத காரணங்களுக்காக வியக்கத்தக்க இந்தியாவாக இருக்கிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய ஆலோசனையில் சில வார்த்தைகளையும் ஆனந்த் மஹிந்திரா அதில் குறிப்பிட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரும் பப்படங்களுக்காக சண்டை போட்டால் என்ன பெயர் வைப்பது என்பது பற்றி நிறைய வார்த்தைகளையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
