பிடிச்சு கொடுத்தா 25,000ரூ பணம்.. மொத்த மாநில போலீசும் தேடிய நபர்.. பரபர பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநில காவல்துறையினரால் கடந்த சில நாட்களாக தேடப்பட்டு வந்த ஸ்ரீகாந்த் தியாகியை அதிரடி படை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Also Read | சிசிடிவி கேமராவுக்கு முத்தம் கொடுத்துட்டு ஓட்டம் பிடித்த திருடர்கள்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்..!
பரபரப்பு
உத்திர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பெண் ஒருவரிடம் ஸ்ரீகாந்த் தியாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. நொய்டாவிலுள்ள கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டியில் மரக்கன்றுகளை தியாகி நடச்சென்ற நிலையில், அதனை விதிமீறல் எனக்கூறிய பெண்ணிடம் அவர் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
இதனிடையே இந்த வீடியோ பொதுக்கள் மத்தியில் தீயாக பரவவே, அவரை பிடிக்க அதிரடி படை ஒன்றும் அமைக்கப்பட்டது. இதனிடையே உத்திர பிரதேச மாநில முதல்வர் இந்த வழக்கு குறித்து கேட்டறிந்து, உடனடியாக தியாகியை கைது செய்யும்படி காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்தியிருந்தார். இதனிடையே தியாகி தலைமறைவானார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலி எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தியாகியின் காரை நொய்டா போலீசார் பறிமுதல் செய்தனர்.
தரைமட்டமான கட்டிடங்கள்
இதனை தொடர்ந்து உத்திர பிரதேச மாநில காவல்துறையினர் நொய்டாவில் ஸ்ரீகாந்த் தியாகிக்குச் சொந்தமான சட்டவிரோதக் கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கியது. மேலும், அவருடன் இருந்த உதவியாளர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதனிடையே நொய்டா காவல்துறை ஸ்ரீகாந்த் தியாகியை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25,000 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இப்படி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஸ்ரீகாந்த் தியாகியை அதிரடி படை காவல்துறையினர் மீரட் பகுதியில் வைத்து கைது செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார், "இது போன்ற சம்பவங்களை உத்திர பிரதேச நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது. இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தவிர, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு கான்ஸ்டபிள்களும் பணியில் அலட்சியமாக இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
கடந்த சில நாட்களாக உத்திரபிரதேச மாநில காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஸ்ரீகாந்த் தியாகி அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநிலம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
