'உலகை அதிரவைத்த அறிவியல் அற்புதம்!'... ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு!... வியப்பூட்டும் தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 26, 2020 06:51 PM

பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினத்தை கண்டுப்பிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

world\'s first multicellular species living without O2 discovered

உலகில் உள்ள அனைத்து பல்செல் உயிரினங்களிலும் ஆக்சிஜனை பிரதானமாகக் கொண்டு காற்று சுவாசம் நடைபெறுவதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் ஒட்டுண்ணியை கண்டுபிடித்துள்ளனர்.

சால்மோன் மீனின் தசைசெல்களில் உயிர்வாழும் 10க்கும் குறைவான செல்களைக் கொண்ட ஜெல்லிமீன் போன்ற அந்த ஒட்டுண்ணிக்கு ஹெனிகுவா சால்மினிகோலா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதில் செல்களின் ஆற்றல் நிலையமான மைட்டோகாண்ட்ரியா இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மைட்டோகாண்ட்ரியா பலசெல் உயிரிகளில் ஆக்சிஜனை வேதி ஆற்றலாக மாற்றும் தலையாய பணியை செய்வதால், இது காற்று சுவாசத்திற்கு இன்றியமையாததாகும். இந்நிலையில், அவ்வமைப்பில்லாத உயிரியை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #SPECIES #OXYGEN #DISCOVER