என்னங்க சொல்றீங்க...? 'ஆமா சார், எல்லாத்துக்கும் காரணம்...' 'ஸ்டேஷன்ல உள்ள எலிங்க தான்...' இப்படி கூடவா நடக்கும்...! - ஆடிப்போன உயர் அதிகாரி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 29, 2021 02:32 PM

காவல்நிலையத்தில் இருந்து 1400 கள்ளச்சாராய பாட்டில்களை எலிகள் கடத்தி சென்ற புதுவித சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

Rats 1400 bottles of counterfeit liquor Uttar Pradesh

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடா மாவட்டத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றிய கள்ளச்சாராய பெட்டிகளை கோட்வாலி தகத் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது காவல் நிலையத்தில் இருந்து 1400 கள்ளச்சாரய பெட்டிகள் மாயமாகியுள்ளன. மாயமான பெட்டிகள் குறித்து கோட்வாலி தகத் காவல்நிலைய அதிகாரிகளை விசாரிக்கும் போது, பெட்டிகள் காணாமல் போனதற்கு காவல் நிலையத்தில் உள்ள எலிகளே காரணம் என தெரிவித்துள்ளனர்.

காவலர்களின் இந்த பதிலால் அதிர்ந்த உயர் அதிகாரிகள் காவல் ஆய்வாளர் மற்றும் எழுத்தர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

                         Rats 1400 bottles of counterfeit liquor Uttar Pradesh

அதுமட்டுமல்லாது அங்கிருந்த மேலும் 239 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய பாட்டில்களும் எலிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்நிலைய குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.

                                     Rats 1400 bottles of counterfeit liquor Uttar Pradesh

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமல்லாது காவல்துறை உயரதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rats 1400 bottles of counterfeit liquor Uttar Pradesh | India News.