கடைசி மேட்ச்'க்கு நடுவுல.. ஆக்ரோஷத்தில் துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்த 'கோலி'!!.. 'வைரல்' வீடியோ... காரணம் என்ன??..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும், இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், இந்திய அணிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெற்ற தொடர்கள் அனைத்திலும், டிஆர்எஸ் முடிவு மற்றும் மூன்றாம் நடுவரின் தீர்ப்புகள் அதிகம் சலசலப்பை கிளப்பியிருந்தது. அதிலும் குறிப்பாக, சில முடிவுகள், இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியின் போது, ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) வீசிய பந்தை இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் (Jos Butler) எதிர்கொண்ட போது, அது அவரது பேடில் பட்டது. இதனால், இந்திய அணி 'எல்.பி.டபுள்யூ'க்கு அப்பீல் செய்த நிலையில், போட்டி நடுவர் அனில் சவுத்ரி முதலில் அதனை அவுட் கொடுக்கவில்லை. தொடர்ந்து, இந்திய அணி தரப்பில், டிஆர்எஸ் முறை கோரப்பட்டது. அதன் பிறகே, ரீப்ளேயில் அவுட் என்பது தெரிந்தது.
— pant shirt fc (@pant_fc) March 28, 2021
இதனைத் தொடர்ந்து, பட்லரின் அவுட்டை கொண்டாடும் விதமாக, கோலி மற்றும் சக இந்திய வீரர்கள் ஆர்ப்பரித்தும், துள்ளிக் குதித்தும் கொண்டாடித் தள்ளினர்.
டிஆர்எஸ் மற்றும் சாஃப்ட் சிக்னல்கள் இந்திய அணிக்கு எதிராகவே அதிகம் அமைந்தததையடுத்து, ஜோஸ் பட்லரின் விக்கெட், டிஆர்எஸ் மூலம் கிடைத்ததால், இந்திய வீரர்கள் அதனை வேற லெவலில் கொண்டாடினர்.
இது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.