'வாங்கின குவாட்டர கீழ ஊத்தவும் முடியல, குடிக்கவும் வழியில்ல...' 'பாட்டிலுக்கு உள்ள என்னமோ கெடக்குது...' - தர்மசங்கடத்தில் ஆன மதுப்பிரியர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் மதுபாட்டிலில் இரும்பு துகள்கள் இருப்பதை கண்ட மதுபிரியர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மது ஒரு உயிர்கொல்லி என்றாலும் அதை குடிப்பவர்கள் தங்களுக்கென மரியாதையான பெயர்களை சூட்டிக்கொள்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் குடிமகன்கள் என்ற பெயர் மதுபிரியர்கள் என்ற பெயர் பிரபலமாகியுள்ளது.
இந்நிலையில் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் மதுபிரியர் ஒருவர், நேற்று மதியம் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் குவாட்டர் பாட்டில் வாங்கியுள்ளார். அப்போது மதுபாட்டிலின் உள்ளே ஏதோ ஒன்று இருப்பது போல் தெரியவே அதை பிரிக்காமல் அப்படியே டாஸ்மாக் ஊழியரிடம் காட்டியுள்ளார்.
அப்போது தான் மதுபாட்டிலுக்குள் இரும்பு துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து தனக்கு இந்த பாட்டிலுக்கு பதில் வேறு குவாட்டர் பாட்டில் வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவரது கோரிக்கையை பொருத்தப்படுத்தாமல் மாற்றித்தர முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளார். இதன்காரணமாக மதுவை வாங்கிய நபர் அதை கீழே கொட்டவும் மனமில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் குவாட்டர் பாட்டிலை குடிக்காமல் அப்படியே வைத்துக்கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்
