#VIDEO: 'போலாம் ரைட்...' 'ஓ அப்போ என்ன பஸ்ல ஏத்த மாட்டிங்களா, இப்போ பாருங்க...' 'எக்ஸ்பிரஸ் பஸ்ல சாகசம்...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடிக்கு வெளியே நின்றவாறு பயணம் செய்த மதுப்பிரியரின் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தென்காசி மாவட்டம் கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் வீட்டுசாமான்களை வாங்குவதற்காக ஆலங்குளம் வந்திருக்கிறார். பொருட்களை வாங்கிவிட்டு, அப்படியே பழகிய குணத்திற்கு மதுவை வாங்கி குடித்துள்ளார். உச்சக்கட்ட போதையுடன் எக்ஸ்பிரஸ் பேருந்தில் ஏறியுள்ளார்.
அப்போது கரும்புளியூத்தில் நிற்காது என்று கூறி நடத்துநர் இறக்கிவிடவே, கோபமடைந்த காளிமுத்து, பஸ்ஸை நகர விடாமல் முன்னே சென்று ஆபாசமாக கெட்ட வார்த்தைகளினால் திட்ட தொங்கியுள்ளார். தொடர்ந்து பேருந்தின் முன்பக்க கண்ணாடிக்கு முன் காளிமுத்து ஏறி நிற்கவே, அவரை பயமுறுத்துவதற்காக ஓட்டுநர் பேருந்தை சில அடி தூரம் இயக்கியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
