'காதலனிடமும், காதலனின் தாயிடமும் போனில் கெஞ்சிய இளம் பெண் வழக்கில் புதிய தகவல்!'.. டிக்டாக் தோழியான சீரியல் நடிகை தலைமறைவு?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 13, 2020 12:52 PM

திருமணம் செய்துகொள்ள மறுத்தத காதலன் மற்றும் அவரது தாயாரிடம் போனில் கெஞ்சி பேசிய  இளம்பெண் ஒருவர் விபரீத முடிவு எடுத்த சம்பவம் கேரளாவை அதிர வைத்தது.

ramsi case Serial actress goes into hiding Police Probe Kerala

கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது ராம்ஸி என்கிற இளம்பெண் அவருடைய காதலர் என்று அறியப்படும் பல்லிமுக்கு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கு அவரது குடும்பத்தினர் வேறு மணப்பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சித்ததை அடுத்து, ஹரிஷின் தாயாரிடமும், ஹரிஷிடமும் அப்பெண் கெஞ்சியபடி பேசிய ஆடியோ பதிவு உலுக்கியது. அதில், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருந்ததும், ஹரிஷிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறியபோது, அவர் தன்னை கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், ஹரிஷ் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் கருவைக் கலைத்ததாகவும்  குறிப்பிட்டிருந்தார்.

இறுதியாக பேசிய ராம்ஸி , “நீங்கள் தேவைப்படும் போது என்னை பயன்படுத்தி விட்டு, இப்போது வேண்டாம் என்று உதறுகிறீர்கள். எனக்கு ஏதாவது நேர்ந்தால் என் உடலை பார்க்க கூட வர வேண்டாம்” என்று ஹரிஷிடம் கூறிவிட்டு போனை வைத்தார். பின்புதான் ராம்ஸி அந்த விபரீத முடிவை எடுத்தார்.  இந்நிலையில் ராம்ஸியுடன் நெருக்கமாக இருந்து, டிக்டாக் வீடியோக்களில் நடித்த, அவரது தோழியும் நடிகையுமான லஷ்மி புரொமோத்தை தொடர்புகொண்டு போலீஸார் விசாரணை செய்ததாகவும், இதனை அடுத்து அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கல் வெளியாகியுள்ளதாக கேரள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ramsi case Serial actress goes into hiding Police Probe Kerala | India News.