'வெளிநாட்டில் இருந்து வந்த கணவர்!'.. ஆசை ஆசையாக சாப்பாடு கொடுத்துவிட்டு மனைவி கொடுத்த ஷாக்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கணவருக்கு மனைவி ஆசையாக உணவு கொடுத்துள்ளார். அதன் பின் மனைவி செய்துள்ள காரியம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான முபீனா. இவரது கணவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய அவர், கடந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். எனினும் கொரோனா கால கடுப்பாடு காரணமாக 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் கணவருக்கு சிற்றுண்டி தயார் செய்வதற்காக வெளியே சென்ற முபீனா மாயமானார். இதுகுறித்து முபீனாவின் கணவர் போலீஸாரிடத்தில் அளித்த புகாரை அடுத்து போலீஸார் முபீனாவைத் தேடிவந்தனர்.
இதனிடையே ஷெரீப் (38) என்கிற நபரையும் காணவில்லை என்று அவரது மனைவி அளித்த புகாரையும் போலீஸார் விசாரித்த பின்னர்தான், முபீனாவும் ஷெரீப்பும் காதலித்து பின்னர் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இதனால் முபீனாவின் கணவரும், ஷெரீபின் மனைவியும் அதிர்ந்துள்ளனர். இந்நிலையில், முபீனா, ஷெரீப் இருவரும் போலீஸாரால், கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
