“தந்தைக்கு மகன் சொன்ன வித்யாசமான பிறந்த நாள் வாழ்த்து!”.. 28 வருடங்களுக்கு பிறகு 'மகன்' பாணிலேயே பழிவாங்கிய தந்தை.. சுவாரஸ்ய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 12, 2020 06:58 PM

மகனைப் பழிவாங்குவதற்காக 28 ஆண்டுகள் தந்தை ஒருவர் காத்திருந்திருக்கிறார். அந்த சுவாரஸ்ய பின்னணியை இங்கு பார்ப்போம்.

Dad keeps sons birthday card for 28 years does hilarious revenge

ஒரு தந்தையின் 42வது பிறந்த நாளின் போது அவரது 14 வயது மகன் Rob Witts அவருக்கு தன் கைப்பட தயாரித்த ஒரு பிறந்தநாள் அட்டையை அனுப்பி இருந்தார். அப்போது அந்த பிறந்தநாள் வாழ்த்து, “அட்டையில் எல்லோரும் கவனியுங்கள் என் தந்தைக்கு இப்போது 42 வயது ஆகிவிட்டது. அது பெரிதாக ஒன்றும் கவரப்போவதில்லை. இல்லையா? 42 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. உங்கள் மகன் Rob Witts” என்று அந்த அட்டையில் எழுதிக் கொடுத்துள்ளார். தந்தைக்கு 42 வயது ஆகிவிட்டது என்பதை சூசகமாக கிண்டல் செய்து Rob Witts அந்த அட்டையை கொடுத்துள்ளார். அந்த வாழ்த்து அட்டையை பார்த்த அந்த அப்பா ஒன்றும் பெரிதாக சொல்ல வில்லை என்றாலும் கூட அதை எங்கேயும் தூக்கிப் போடாமல் பத்திரமாக வைத்திருந்துள்ளார். 

 

இப்படியே காலம் 28 ஆண்டுகளை உருட்டி விட்டது. அப்போது 14 வயதில் இருந்த Rob WIttsக்கு இப்போது 42 வயது ஆகிவிட்டது. சரியாக மகனுடைய பிறந்தநாளுக்கு அதே வாழ்த்து அட்டையை எடுத்து சில திருத்தங்களை செய்து மகனுக்கே திருப்பிக் கொடுத்திருக்கிறார் இந்த அப்பா. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல, “உனக்கு நீண்ட காலம் ஆகி இருக்கும் என நம்புகிறேன் மகனே. 42 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இப்படிக்கு உன் அப்பா” என்று அந்த வாழ்த்து அட்டையில் திருத்தம் செய்து, “இப்போது நீயும் ஒரு அப்பாதான் என்பதை நினைவுபடுத்துமாறு” கொடுத்துள்ளார். இந்த வாழ்த்தட்டை வைரலாகி வருகிறது.

 

Tags : #ROBWITTS

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dad keeps sons birthday card for 28 years does hilarious revenge | World News.