'வந்து கேப்பாங்க.. என்னை பத்தி தப்பா எதுவும் சொல்லிடாதீங்க!'.. அக்கம் பக்கத்தினரிடம் கெஞ்சிய சஞ்சனா? .. 'அர்ச்சனா' பெயரில் பிஎம்டபுள்யூ கார்? .. விசாரணையில் வெளியாகும் கிடுகிடு தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபோதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி டாக்டர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியை போலீஸார் போதைப்பொருள் விவகாரத்தில் அன்மையில் கைது செய்து விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில் பெங்களூருவில் உள்ள இந்திராநகரில் உள்ள சஞ்சனாவின் வீட்டில் சொத்து ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர் தங்கியிருந்த வீடு மற்றும் அவர் வைத்திருந்த பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவை சஞ்சனாவின் வருமானத்தில் வாங்கப்படவில்லை என்பது தெரிய வந்ததை அடுத்து அவரிடம் விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டது.
அப்போதுதான் சஞ்சனா தனது நண்பரான டாக்டர் ஆஷிஸ் என்பவர் வாங்கிக் கொடுத்ததாக கூறியுள்ளார். சஞ்சனாவும் டாக்டர் ஆஷிஸுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த விஷயமும் அப்போதுதான் தெரியவந்துள்ளது. ஆஷிஸ் அடிக்கடி சஞ்சனாவின் வீட்டிற்கு வந்து மதுவிருந்தில் கலந்து கொண்டுள்ளதும் சஞ்சனாவின் குடும்பத்தினருக்கும் டாக்டருடன் அறிமுகம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த வீட்டை சஞ்சனாவின் பெயரிலும் பிஎம்டபுள்யூ காரை சஞ்சனாவின் மற்றொரு பெயரான அர்ச்சனா கல்ராணி என்கிற பெயரிலும் அவர் பதிவு செய்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
மதுபான விருந்துகளின்போது அதிக அளவில் மது அருந்திவிட்டு அக்கம்பக்கத்தினருடன் தகராறு செய்த சஞ்சனாவின் செயல்பாடுகளும் தெரியவந்துள்ளன. இதனால் அக்கம் பக்கத்தினர் சஞ்சனாவின் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. மேலும் போதைப் பொருள் பழக்கம் காரணமாக போலீஸ் விசாரிக்க வருவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த சஞ்சனா இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாகவே அக்கம்பக்கத்தினரிடம் போலீஸ் தன்னை குறித்து ஏதேனும் கேட்டால் தப்பாக சொல்லி விடாதீர்கள் என கெஞ்சி உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தனது செல்போனில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அவர் அழித்துள்ளதாகவும், வெளி மாநிலம், வெளி நாடுகள் சென்று வந்த விமான டிக்கெட் மற்றும் விருந்து நிகழ்ச்சி தொடர்பான ஆவணங்களையும் அவர் அழித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் மதுபானம் அருந்தினால் ரத்த பரிசோதனையில் தெரிந்துவிடும் என்பதாலும் தனக்கு மது பழக்கம் உண்டு என்பதை போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்றும் கருதிய சஞ்சனா சில நாட்கள் மது அருந்தாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் புழக்கம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராகினி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் பெங்களூருவில் உள்ள மாடிவாளா மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருவரையும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போதைப்பொருள் பயன்படுத்தியதில் 24 முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக இரண்டு நடிகைகளும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
