"உங்க நேர்மைக்கு பெரிய 'சல்யூட்' தலைவா",,.. 'மனம்' உருகிப் போன 'நெட்டிசன்கள்'... நடந்தது 'என்ன'?
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் கொச்சியில் கப்பல் சரி செய்யும் யார்டில் பணிபுரிந்து வருபவர் சுதாகரன். இவர் கடந்த புதன்கிழமையன்று சாலையோரத்தில் இருந்து பர்ஸ் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

அதனுள் சுமார் 65,000 ரூபாய் இருந்த நிலையில், அந்த பர்ஸை பனங்காடு போலீஸ் நிலையத்தில் கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து, அந்த பர்ஸ்ஸின் உரிமையாளர் யார் என போலீசார் விசாரித்துள்ளனர். அதில், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு சொந்தமான பர்ஸ் என்பது தெரிய வந்தது. பர்ஸ் தொலைந்த மறுநாள் அதன் உரிமையாளரிடமே சேர்க்கப்பட்டது.
சுதாகரனின் நேர்மையான இந்த செயல் தொடர்பான பதிவு இணையத்தில் அதிகம் வைரலானது. அவரது நேர்மைக்கு நெட்டிசன்கள் பலர் புகழ்ந்தும், பாராட்டியும் வருகின்றனர்.
PK Sudhakaran (pic 1), an employee of Naval Ship Repair Yard at Kochi, spotted a wallet containing Rs 65,000 cash on road on 26th Aug. He deposited it at Panangad Police Station. It was returned to its owner, an auto driver, on 27th Aug: Southern Naval Command, Kochi, #Kerala pic.twitter.com/KDD7fhILBv
— ANI (@ANI) August 27, 2020

மற்ற செய்திகள்
