'ஊசி இல்ல... இது வேற லெவல் ஐடியா'!.. கொரோனாவை தடுக்க... மூக்கு வழியாக 'ஸ்பிரே' தடுப்பு மருந்து!.. வியப்பூட்டம் தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Sep 13, 2020 12:18 PM

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க முதல் முறையாக மூக்கு வழியாக ஸ்பிரே செய்யக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்க சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

china approves first nasal spray covid19 corona vaccine clinical trial

கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகள் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரஷ்யா மருந்தை உருவாக்கிவிட்டதாக கூறி அதன் உற்பத்தியை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முதல் முறையாக 'மூக்கு' வழியாக ஸ்பிரே செய்யக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.

இந்த கொரோனா தடுப்பு மருந்து வரும் நவம்பர் மாதத்தில் முதலாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்காக 100 தன்னார்வலர்களை நியமிக்கப்படவுள்ளதாகவும் சீனாவின் தேசிய மருத்துவ தயாரிப்பு நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வகை தடுப்பு மருந்து இதுவாகும் என்று அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் யுயென் குவோக்-யுங், 'தடுப்பு மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படுத்த சுவாச வைரஸ்களின் இயற்கையான தொற்று பாதையை தூண்டுகிறது. மேலும், இந்த தடுப்பூசி மக்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இரட்டை பாதுகாப்பு அளிக்கக்கூடும்' என தெரிவித்தார். 

தினசரிக்கு ஊசி மருந்துகளுடன் ஒப்பிடும்போது, ​​ஒரு நாசி தெளிப்பு தடுப்பூசி நிர்வகிப்பது எளிதானது. மேலும் முதிர்ச்சியடைந்த இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி உற்பத்தி தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதால், வெகுஜன உற்பத்தி மற்றும் விநியோகிக்க எளிதானது என பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நோய் எதிர்ப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஆனால், சீனாவின் இந்த புதிய தடுப்பு மருந்து முறையான பக்க விளைவுகளை ஏற்படுத்தாது, என்றாலும் ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் போன்ற சுவாச அமைப்பில் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று நோய் எதிர்ப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. China approves first nasal spray covid19 corona vaccine clinical trial | World News.