இளம்பெண்ணுக்கு உறுதியான 'கொரோனா',,.. அழைத்துச் செல்ல வந்த 'ஆம்புலன்சில்' வைத்தே,,.. 'பெண்ணுக்கு' நேர்ந்த பதைபதைக்கும் 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றிரவு உறுதியானது.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் தான் மருத்துவமனை வந்தடைய வேண்டும் என்பதால் அவர்களை அழைத்து வர ஆம்புலன்ஸ் சென்றது. நள்ளிரவு நேரத்தில் ஆம்புலன்ஸ் சென்ற நிலையில், இரண்டு பேரையும் ஏற்றிக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனை சென்றது.
அங்கு ஒரு பெண்ணை மட்டும் அனுமதித்த நிலையில், மற்றொரு பெண் நோயாளியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு ஆம்புலன்ஸ் டிரைவரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணை ஆம்புலன்சில் கொண்டு சென்ற டிரைவர், ஆள் அரவமில்லாத இடம் பார்த்து நிறுத்திய நிலையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து, இந்த சம்பவத்தை தெரிவிக்கக் கூடாது என்றும், அப்படி தெரிவித்தால் கடும் விளைவுகள் ஏற்படும் எனவும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, தனக்கு நேர்ந்த துயரம் குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். பரிசோதனையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மீது கொலை முயற்சி மற்றும் கிரிமினல் வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் தற்காலிகமாக பணிக்கு சேர்ந்த நிலையில், அவர் யார் மூலம் பணிக்கு சேர்ந்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆம்புலன்சிலும் குறைந்தது இரண்டு ஊழியர்கள் இருக்க வேண்டும், அதுவும் பெண் நோயாளி என்றால் அதிக கவனம் வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்தனர். கொரோனா உறுதியான இளம்பெண்ணை ஆம்புலன்சில் வைத்தே வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
