“தலைமுடியை புடிச்சு இழுத்து..”.. “கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க!”.. நடிகையின் ‘திடுக்கிடும்’ இன்ஸ்டாகிராம் பதிவு!... அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியா19 வயதான தொலைக்காட்சி நடிகை திரிப்தி ஷங்க்தார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் கும்கும் பாக்யா என்ற தொலைக்காட்சி தொடரில், மும்பையில் தங்கி நடித்து வருகிறார்.

ஓயே இடியட் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ள இவர், தன்னுடைய தந்தை ராம்ரதன் ஷங்க்தார் தனது தலைமுடியை பிடித்து இழுத்து அடித்ததாக கூறி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ அதிரவைத்துள்ளது. அத்துடன், 28 வயதுடைய நபர் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலுக்கட்டாயப் படுத்துவதாகவும், இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என அவர் மிரட்டுவதாகவும், அந்த வீடியோவில், திரிப்தி தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு பக்கபலமாக இருக்கும் தனது தாய் மற்றும் தம்பியையும், தனது தந்தை மிரட்டுவதாக கண்ணீர் மல்க பேசிய திரிப்தி, ஒரே ஒரு படம் மட்டுமே நடித்துள்ள தனது எதிர்காலத்தை சிதைக்க முயற்சிப்பதாகவும் அந்த வீடியோ பதிவிட்டுள்ளார். தனது மகள் திரிப்தியை போலவே, தன் கணவர் திருமணமான நாளில் இருந்து தன்னை ம்கொடுமைப்படுத்துவதாக திரிப்தியின் தாயாரும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
பின்னர் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் என்று, தாய், மகள் இருவருமே அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்த்துள்ளனர். இந்நிலையில் பரேலி போலீசார் இவர்களுக்கு உதவி செய்வதாகவும், வீட்டைவிட்டு வெளியேறிய மூவரும் தற்போத்ய் பாதுகாப்பாகவே இருப்பதாகவும், திரிப்தியின் மேலாளர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திரிப்தியின் தந்தை ராம்ரதன் ஷங்க்தாரிடம், திரிப்தி மற்றும் அவரது தாயார் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திரிப்தியின் தந்தை கொடுமைப்படுத்துவதாக புகார் கூறி, திரிப்தி வெளியிட்ட வீடியோ, இந்தி சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
