எக்கச்சக்க 'ஆர்டர்' சமாளிக்க முடில... '1 லட்சம்' பேர் வேலைக்கு வேணும்... 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் மக்கள் கடைகளுக்கு நேரடியாக சென்று பொருட்கள் வாங்க அஞ்சுகின்றனர். இதனால் வீட்டிலேயே பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு எக்கச்சக்க டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்துக்கு ஏராளமான ஆர்டர்கள் குவிக்கின்றனவாம். இதனால் அந்த நிறுவனத்துக்கு மட்டும் பொருட்களை விநியோகம் செய்ய, சுமார் 1 லட்சம் ஊழியர்கள் தற்போது தேவைப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதுபோல இந்தியாவிலும் மக்கள் வேகமாக வீடுகளுக்குள் முடங்கி வருவதால் ஆன்லைன் டெலிவரிகளுக்கு எக்கச்சக்க கிராக்கி நிலவுகிறது. இதை சமாளிக்கும் வகையில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுத்து சமாளித்து வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதால் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.