'கொஞ்சம் பொறுங்க 'ராகுல்'... 'ஏன் இவ்வளவு அவசரம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jun 19, 2019 01:26 PM
எம்.பி'யாக பதவி ஏற்றுக்கொண்ட ராகுல்,அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் சென்றதால்,மக்களவையில் கலகலப்பு ஏற்பட்டது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் எம்.பி'களாக பதவியேற்று கொண்டார்கள்.அவர்கள் அனைவரும் மக்களவையின் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாரின் முன்னிலையில் பதவியேற்று கொண்டார்கள்.இதனிடையே மக்களவைக்கு வந்த ராகுல் காந்தி எம்.பியாக பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். அதன் பின்பு அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் ராகுல் சென்றதால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது.
உடனே இதனை கவனித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கையெழுத்திட்டு செல்லுமாறு ராகுலை கேட்டுக் கொண்டார்.இதனையடுத்து எம்.பி.க்கான பொறுப்பு ஏற்பு சான்றிதழில் கையெழுத்திட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்வாகியுள்ளார்.